உள்ளடக்கத்துக்குச் செல்

தேவேந்திர திரிகுனா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தேவேந்திர திரிகுனா (Devendra Triguna) ஓர் இந்திய ஆயுர்வேத மருத்துவராவார். நாடித் துடிப்பு பரிசோதனையில் நிபுணத்துவம் பெற்றவர் என்பதற்காக நன்கு அறியப்படுகிறார். (ஆயுர்வேத சொற்களில் நாடி வைத்தியம் ). [1] இவர் இந்தியக் குடியரசுத் தலைவரின் முன்னாள் கௌரவ மருத்துவராக இருந்தார். [2] ஆயுர்வேத மருத்துவ உற்பத்தியாளர்கள் சங்கம் (AMAM) [3] மற்றும் அகில இந்திய ஆயுர்வேத காங்கிரசு (AIAC) ஆகியவற்றின் தற்போதைய தலைவரும் ஆவார். இந்திய அரசு 1999 இல் இவருக்கு குடிமக்களின் நான்காவது மிக உயர்ந்த விருதான, பத்மசிறீ விருதை வழங்கியது. அதைத் தொடர்ந்து, ஒரு தசாப்தத்திற்குப் பிறகு, 2009 இல் குடிமக்களின் மூன்றாவது கௌரவமான பத்ம பூசண் விருதும் இவருக்கு வழங்கப்பட்டது. [4].

சுயசரிதை

[தொகு]

புகழ்பெற்ற ஆயுர்வேத மருத்துவரும் பத்ம விபூசண் விருது பெற்றவருமான பிரகசுபதி தேவ் திரிகுனா என்பவரின் பாரம்பரிய மருத்துவர்களின் குடும்பத்தில் திரிகுனா பிறந்தார். அவரது தந்தையிடமிருந்து ஆயுர்வேதத்தைக் கற்றுக்கொண்டார். [5] புது தில்லியின் சுற்றளவில் அமைந்துள்ள தனது தந்தையின் மருத்துவமனையில், சாராய் காலே கான் என்ற பெயரில் ஒரு கிராமத்தில் தனது மருத்துவ பயிற்சியைத் தொடங்கினார். தந்தை தேவ் திரிகுனா 2013 இல் இறப்பதற்கு சற்று முன்பு மருத்துவச் சேவையிலிருந்து ஓய்வு பெற்றபோது, தேவேந்திர திரிகுனா மருத்துவமனையின் நிர்வாகத்தை ஏற்றுக்கொண்டார். [6] இரத்த புற்றுநோய், சிறுநீரக நோய்கள், வயிற்று நோய்கள், தோல் நோய்கள், கழுத்துவழி, ஈழை நோய், மூட்டழற்சி, தூக்கமின்மை மற்றும் உயர் இரத்த அழுத்தம் போன்ற பல நோய்களுக்கான நோய் தீர்க்கும் நெறிமுறைகள் இருப்பதாக இவர் கூறுகிறார். [7]

பதவிகள்

[தொகு]

திரிகுனா அகில இந்திய ஆயுர்வேத காங்கிரசின் தலைவராகவும், [1] இந்திய அரசு ஒருங்கிணைப்பு நிறுவனமான இந்திய மருந்துகளின் மத்திய சங்கத்தின் துணைத் தலைவராகவும் உள்ளார். இவர் சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் ஆயுர்வேதத்தில் உள்ள மத்திய ஆராய்ச்சி அமைப்பு மற்றும் இந்திய அரசின் ஆயுர்வேத மருந்தகக் குழுவில் இருக்கிறார். [3] ஆயுர்வேதத்திற்கான உயர் கல்வி மையமான இந்திய அரசின் மையமான இராட்டிரிய ஆயுர்வேத வித்யாபீடத்தின் நிர்வாகக் குழுவிற்கு இவர் தலைமை தாங்குகிறார். [8] சர்வதேச ஆயுர்வேத காங்கிரசின் நிறுவனர் தலைவராகவும் இருக்கிறார். [9] இவர் சிக்கிம், இமாச்சலப் பிரதேசம் மற்றும் உத்தரப்பிரதேச அரசுகளின் ஆயுர்வேத ஆலோசனைக் குழுக்களில் அமர்ந்து ஊழியர்களின் மாநில காப்பீட்டுக் கழகம், ஆயுர்வேத வாரியம் மற்றும் யுனானி திபியா கல்லூரி மற்றும் ஓரியண்டல் வணிக வங்கியின் இயக்குநர்கள் குழுவில் உறுப்பினராக பணியாற்றுகிறார். இவர் பஞ்சாப் தேசிய வங்கியின் இயக்குநர்கள் குழுவின் முன்னாள் உறுப்பினராகவும் உள்ளார். மேலும் குருகுல காங்ரி விஸ்வவித்யாலயாவின் வருகை ஆசிரியராகவும் உள்ளார்.

விருதுகளும் கௌரவங்களும்

[தொகு]

திரிகுண இராட்டிர ஆயுர்வேத வித்யாபீடத்தின் (1995-95) தேர்ந்தெடுக்கப்பட்ட சக ஊழியர் ஆவார். [10] 1999 ஆம் ஆண்டில் இந்திய அரசு இவருக்கு நான்காவது மிக உயர்ந்த குடிமகன் கௌரவமான பத்மசிறீ விருதை வழங்கியது. மேலும் 2009 ஆம் ஆண்டு மூன்றாவது மிக உயர்ந்த குடிமக்கள் விருதான பத்ம பூசண் கௌரவமும் அளிக்கப்பட்டது. [4] லால் பகதூர் சாஸ்திரி பல்கலைக்கழகம் மற்றும் குஜராத் ஆயுர்வேத பல்கலைக்கழகம் ஆகியவையும் டி.எல்.டி பட்டங்களுடன் கௌவரவிக்கப்பட்டார். [3]

குறிப்புகள்

[தொகு]
  1. 1.0 1.1 "Padma Bhushan Vaidya Devendra Triguna". International Ayurveda Congress. 2015. பார்க்கப்பட்ட நாள் 4 November 2015.
  2. "Well known clinician and expert in pulse diagnosis Vaidya Triguna passes away". Pharma Biz. 7 January 2013. பார்க்கப்பட்ட நாள் 4 November 2015.
  3. 3.0 3.1 3.2 "President - Association of Manufacturers of Ayurvedic Medicine". Association of Manufacturers of Ayurvedic Medicine. 2015. பார்க்கப்பட்ட நாள் 4 November 2015.
  4. 4.0 4.1 "Padma Awards" (PDF). Ministry of Home Affairs, Government of India. 2015. Archived from the original (PDF) on 15 November 2014. பார்க்கப்பட்ட நாள் 21 July 2015.
  5. "VAIDYA DEVENDRA TRIGUNA". Ayurvedic Congress. 2015. பார்க்கப்பட்ட நாள் 4 November 2015.
  6. "Medicine and treatment in India". Life Positive. September 1997. பார்க்கப்பட்ட நாள் 4 November 2015.
  7. "All roads lead to Delhi Vaidya's clinic". Gulf News. 24 November 2003. பார்க்கப்பட்ட நாள் 4 November 2015.
  8. "Rashtriya Ayurveda Vidyapeeth". Rashtriya Ayurveda Vidyapeeth governing body. 2015. Archived from the original on 12 January 2016. பார்க்கப்பட்ட நாள் 4 November 2015.
  9. "International Ayurveda Congress Founder president". International Ayurveda Congress. 2015. பார்க்கப்பட்ட நாள் 4 November 2015.
  10. "Fellows of Vidyapeeth". Rashtriya Ayurveda Vidyapeeth. 2015. Archived from the original on 12 January 2016. பார்க்கப்பட்ட நாள் 4 November 2015.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=தேவேந்திர_திரிகுனா&oldid=2967482" இலிருந்து மீள்விக்கப்பட்டது